நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய்களின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மூலமாக தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாக புகார் கிடைத்துள்ளது. எனவே தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைப்பதை தடுக்கவும் தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது
இதுபோன்ற சூழ்நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் தொடர்பான விதிமுறைகளை அரசு மாற்றி வருகிறது. சமீபத்தில் ரேஷன் கார்டை ஒப்படைக்க தகுதியற்றவர்களிடம் அரசு முறையீடுவதாகவும் செய்தி வெளியானது. மேலும் ரேஷன் கார்டை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு தவறாக வழங்கப்பட்டு அரசு ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி கொண்டால் புகாரின் பேரில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே இலவச ரேஷன் பொருள்களின் விதியின்படி “கார்டுதார்கள் வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஃப்ளாட் அல்லது வீடு இருந்தால், நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர், ஆயுத உரிமம் அல்லது கிராமத்தில் 2 லட்சத்துக்கு மேல் மற்றும் நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சம் உங்களுக்கு வருமானம் வந்தால் நீங்கள் ரேஷன் கார்டு பெறுவதற்கு தகுதியற்றவர். அதனால் தான் ரேஷன் காரை உடனடியாக தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேல்கண்ட சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்கும் படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.