Categories
தேசிய செய்திகள்

உங்க ரேஷன் கார்டு தொலைஞ்சுட்டா?… கவலையை விடுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை, பான் கார்டுகளை தொடர்ந்து ரேஷன் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. இந்த ரேஷன் அட்டை பல்வேறு இடங்களில் அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் அரசாங்கம் வழங்கும் இலவச ரேஷனை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் பயனர்களுக்கு இந்த அட்டை வாயிலாக சென்றடைகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை பெற ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. ரேஷன் அட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டாக வழங்கப்பட்டது.

இதனிடையில் சில நேரங்களில் நம் ரேஷன் கார்டு தொலைந்து விடும் (அல்லது) திருட்டுபோய் விடுகிறது. அந்த சமயங்களில் நாம் அதிக சிரமத்திற்கு ஆளாகிறோம். ஆனால் எளிதில் ரேஷன் கார்டை மீண்டும் உருவாக்கிக்கொள்ளலாம். ரேஷன் கார்டு தொலைந்தால் சில எளிய வழிமுறைகளைப் கடைபிடித்து நகல் ரேஷன் அட்டையை ஆன்லைனிலும்,ஆஃப்லைனிலும் நகல் ரேஷன் கார்டை பெறலாம். ஆகவே இந்த நகல் ரேஷன் கார்டை பெறுவதற்கு, ரேஷன் கார்டு எண், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை , குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் அடையாளச் சான்று போன்றவை முக்கியமான ஆவணமாக கேட்கப்படும்.

நகல் ரேஷன் கார்டை ஆன்லைனில் உருவாக்கும் முறை

# முதலாவதாக உங்கள் மாநிலத்தின் உணவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும.

# இப்போது முகப்புப்பக்கம் உங்கள் முன் திறக்கும்.

# அதன்பின் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இணைப்பை கிளிக்செய்யவும்.

# தற்போது 1 ஆன்லைன் படிவம் உங்கள் முன் திறக்கும். அதில் கேட்கப்படும் அனைத்து முக்கிய தகவல்களையும் நிரப்பவும்.

# தற்போது கோரப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றி அதை சப்மிட் செய்யவும்.

# இந்தப் வழிமுறைகளைப் கடைபிடித்து நீங்கள் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நகல் ரேஷன் கார்டை ஆஃப்லைனில் பெறுவது எவ்வாறு 

# நீங்கள் மாவட்டஉணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்குச் செல்லவும்.

# குடும்ப உறுப்பினர்களின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் உடன் வைத்திருக்கவும்.

# பின் மையத்தில் நகல் ரேஷன் கார்டுக்கான படிவத்தை பெற வேண்டும்.

# படிவத்தினை பூர்த்தி செய்த பின் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், டிப்போ ஹோல்டர் அறிக்கை, அபராதக் கட்டணத்தின் 2 ரசீதுகள் போன்றவற்றை சமர்ப்பிக்கவும்.

# சரிபார்ப்புக்குப்பின் அதனைப் குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். அடுத்து நகல் ரேஷன் கார்டைப் பெற முடியும்.

Categories

Tech |