கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று பெரும்பாலானவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 436 டெபிட் ஆனது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு உருவாகி இருப்பதாக தெரிகிறது. ஏன் எதற்கு என்று இது குறித்து ஆராய்ந்த பொழுது மத்திய அரசின் ரூபாய் 2 லட்சம் முதலீடு தொகை கொண்ட பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து இருப்பவர்களுக்கு அதற்கான ப்ரீமியம் தொகை ரூ.436 ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்டோ டெபிட் முறையில் பிடித்தம் செய்திருக்கிறார்கள்.
இன்சூரன்ஸ் எடுத்திருப்பவர்களுக்கு இனி ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா இன்சூரன்ஸ்கான பிரிமியம் பிடித்தம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை பாலிசி காலம் கணக்கிடப்பட்டு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை ஜூன் 1 அல்லது அதற்கு முன் குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து பிடிக்கப்படும். இந்நிலையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்திற்கான பீரிமியம் ரூ. 330-லிருந்து ரூ. 436 அதிகரிக்கப்பட்டுள்ளது.