Categories
தேசிய செய்திகள்

உங்க வங்கி கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு?…. இனி ஒரு மிஸ்டு கால் போதும்…. இதோ ஈசியான வழி….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மோடி அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் பெரும்பாலான மக்கள் கணக்கு தொடங்கியுள்ளனர். அப்படி கணக்கு வைத்துள்ளவர்கள் இதில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்க்க சிரமப்படுகின்றன.

அதனால் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது உங்கள் ஜன் தன் யோஜனா கணக்கில் பேலன்ஸ் இருப்பைநீங்கள் சரிபார்க்க விரும்பினால் வீட்டிலிருந்து கொண்டே ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். அனைத்து தகவல்களையும் பெறலாம். PFMS போர்டல் மூலமாகவும் பேலன்ஸை தெரிந்து கொள்ள முடியும்.

PFMS போர்ட்டல் மூலமாக பேலன்ஸ் சரிபார்க்க நீங்கள் முதலில் இந்த இணைப்பிற்குச் செல்ல வேண்டும் https://pfms.nic.in/NewDefaultHome.aspx# .

இப்போது ‘Know Your Payment’ என்பதைக் கிளிக் செய்க.

அதன் பிறகு உங்கள் கணக்கு எண்ணை உள்ளிடவும்.

அதன் பிறகு கொடுக்கப்பட்ட கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்.

இதற்குப் பிறகு, உங்கள் கணக்கின் இருப்பு உங்கள் முன் திரையில் தோன்றும்.

மிஸ்டு கால் மூலமாக பேலன்ஸ் சரி பார்க்க வாடிக்கையாளர்கள் சேவையின் தேவை. அப்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜன் தன் கணக்கு வைத்திருந்தால் மிஸ்டுகால் பேலன்ஸ் எளிதில் பார்க்கலாம். அதற்கு 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணில் மிஸ்டுகால் கொடுத்தால் போதும். முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே நீங்கள் மிஸ்டு கால் செய்ய வேண்டும். வங்கி விதிமுறைகளின் படி நீங்கள் எந்த எண்ணில் பதிவு செய்துள்ளீர்களோ அதே எண்ணில் இருந்து தான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.

Categories

Tech |