வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் அவர்களை கவரும் வகையில் புது புது அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி வாட்ஸ் அப் செயலியில் பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றான மெசேஜ் ரியாக்ஷன்ஸ் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் ரியாக்சன்ஸ் அம்சம் ஸ்டேபிள் மற்றும் பீட்டா பில்டுகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த புதிய அம்சம் மூலமாக பயனர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலமாக பதில் அனுப்பலாம். அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப் செயலியில் பகிரப்படும் ஃபைல் சைஸ் எண்ணிக்கை 2 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதன் அளவு 100 MB ஆக இருந்தது. இந்த இரு அம்சங்களும் விரைவில் வழங்கப்படும் என வாட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில் புதிய அம்சங்கள் பற்றிய அறிவிப்பை வாட்ஸ்அப் தற்போது வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குரூப் சாட்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ் அப் மெசேஜ் ரியாக்சன் அம்சத்தில் அதிகபட்சமாக ஆறு ஏமோஜிக்களை பயன்படுத்தி பயனர்கள் பதில் அனுப்பலாம்.இவற்றை பயன்படுத்த மெசேஜை அழுத்திப் பிடித்து திரையின் மேல் தோன்றும் எமோஜிகளில் ஒன்றை தேர்வு செய்தாலே போதும். வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.