Categories
தேசிய செய்திகள்

உங்க வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கா…? அரசு வழங்கும் ரூ. 50,000 உதவி தொகை… பெறுவது எப்படி…?

 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என 50 ஆயிரம் அரசு வழங்குகிறது.

எப்படி விண்ணப்பிக்கலாம்:

சமூக நலத்துறை மூலம் செயல்பட்டுவரும் தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளுக்கு 25 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் ஆவணங்கள் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் உள்ள நிலையில் மற்றொரு குழந்தை பிறந்து மூன்று வயதுக்குள் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.

முதல் பெண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.பெண் குழந்தையின் தாய்க்கு 35 வயதுக்கு மேல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும். அதற்கான மருத்துவச் சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பெண் குழந்தை வைத்திருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

10 ஆண்டுகளாக விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசித்து இருக்க வேண்டும். பிறப்புச் சான்று, குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம், திருமண சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குழந்தைகள் பிறப்பு சான்று ஆகியவை முக்கிய ஆவணங்கள் ஆகும்.

Categories

Tech |