Categories
பல்சுவை

உங்க வீட்டில் எலித்தொல்லை அதிகமா இருக்கா?…. விரட்டியடிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க….!!!!

ஒவ்வொரு வீட்டிலும்எலிகள்  நுழைந்து விட்டால் மிகப் பெரிய தொல்லையாக மாறிவிடும். அதனால் கிச்சன் நாசமாகிவிடும். எலி மற்றும் கரப்பான் பூச்சி ஆகியவை வீட்டினுள் நுழைந்து விட்டால் வீடு அசுத்தமாக அது மட்டுமல்லாமல் பல்வேறு கொடிய நோய் கிருமிகளையும் அது பரப்பி விடுகிறது. அதிலும் குறிப்பாக எலிகள் பிளேக் வைரஸை பரப்பும் ஆபத்து கொண்டவை. அதனால் நாம் முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ள ஏரிகளை உடனடியாக விரட்டுவதும் முக்கியம் தான் .

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்பட்ட பீனட் பட்டர் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இது எலிகளுக்கும் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் உள்ள எலிகளைப் பிடிப்பதற்கு எலி பொறியில் தக்காளி அல்லது தேங்காய் துண்டு ஆகியவற்றை வைப்பார்கள். ஆனால் எலி பொறியில் சிறிதளவு பீநட் பட்டர் தடவி, அதன் உள்ளேயும் சிறிது பீனட் பட்டர் தடவி வைத்து விடுங்கள். பிறகு எலிகள் அதனை சாப்பிட முயற்சிக்கும் போது அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மையால் சிறிது நேரம் நன்கு அவற்றின் கால்கள் மாற்றிக் கொள்ளும். அடுத்த நாள் கட்டாயம் நீங்கள் வைத்த எலி பொறியில் எலி சிக்கி இருக்கும்.

இதனைத் தவிர எலிகளை விரட்டுவது அதற்கு புதினா இலைகளை பயன்படுத்தலாம். எலிகள் அடிக்கடி வந்து போகும் இடத்தில் பிரஷ்ஷான புதினா இலைகளைக் கசக்கி போட்டு விடுங்கள். புதினா சேர்க்கப்பட்ட டூத் பேஸ்ட் வாங்கி எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் சிறிய சிறிய உருண்டைகளாக தடவி போடுங்கள். எலிகள் அதில் வசமாக மாட்டிக் கொள்ளும். அவை அந்த புதினாவின் வாசனை யில் மயங்கி விடும்.

வீட்டில் உள்ள ஏரிகளை விரட்டுவதற்கு பிரிஞ்சி இலை பயன்படுத்தலாம். பிரியாணி இலையை தான் பிரிஞ்சி இலை என்று கூறுகிறோம். இந்த இலைகளில் இருந்து வரும் நறுமணம் எலிகளுக்கு அறவே பிடிக்காது. எலிகள் அதிகம் வந்து போகும் இடங்களில் இதனை துண்டு துண்டுகளாக உடைத்து அல்லது குறைவான பொடியாக செய்து ஒரு பேப்பரில் அல்லது தட்டில் போட்டு வைத்து விடுங்கள். எலிகள் அந்த இலைகளை நுகரும்போது அப்படியே மயங்கி விடும்.

இறுதியாக எலிகளை விரட்டுவது பேக்கிங் சோடாவிற்கும் மிக முக்கிய பங்கு உள்ளது. எலிகள் வந்து போகும் இடங்களில் பேக்கிங் சோடா கரைசலைத் தெளித்து விடுங்கள். அதில் சிறிது வினிகர் சேர்த்து தெளிக்கலாம். இது விரைவான பலன்களை உங்களுக்கு தரும்.

Categories

Tech |