உங்கள் வீட்டில் கரண்ட் பில் கம்மியாக வருவதற்கு சில டிப்ஸ்களை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குளிர் காலத்தில்தான் அதிகமாக மின்சார பயன்பாடு உள்ளது . வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலங்களில் கீசர் போன்ற சாதனங்கள் நம் வீட்டில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கும். இதை தடுக்க சில விஷயங்களை நாம் ஃபாலோ செய்ய வேண்டும்.
முதலில் நாம் அறையில் இல்லாத போது பல்புகள் அணைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் நாம் பயன்படுத்தும் பல்புகள் கூட மின்சார கட்டணத்தில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். எல்இடி பல்புகள் நமது வீட்டை வெளிச்சமாக வைத்திருக்கும். அதே நேரத்தில் மின்சார கட்டணத்தையும் சேமிக்க உதவும். மற்ற பல்புகளுடன் ஒப்பிடும்போது இது ஆயுட்காலம் அதிகம்.
தூசி, குப்பை, பூச்சிகளிடம் இருந்து உங்களை பாதுகாக்க வைத்திருக்க குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வராதவாரு கதவுகளை நன்றாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது என்ன முக்கியமான விஷயம் என்று கூட நீங்கள் நினைக்கலாம், ஆனால் இதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது கதவின் இடைவெளியில் மூலம் காற்று புகாதவாறு இருந்தால் உங்கள் வீடு எப்போதும் மிதமான வெப்பநிலையில் இருக்கும். இதனால் உங்கள் ஜன்னல்களும் நன்றாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் பயன்படுத்தும் செருகி இருக்கும் பிளக்குகளை எடுத்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதாவது சுவிட்சுகள் அணைக்கப்பட்டிருந்தாலும் 50 சதவீதம் மின்சாரம் ஆனது இந்த சமயங்களில் பயன்படுத்தப்படலாம். குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க முடியாது என்பதால் தான் நாம் சூடான நீருக்காக கீசர் போன்ற சாதனங்களை பயன்படுத்துகிறோம். இந்த சாதனங்கள் அதிக சூடாகும் போது சூடான தண்ணீரை சமன்செய்ய குளிர்ந்த தண்ணீரையும் அதிகம் பயன்படுத்துகிறோம். இதனால் தண்ணீரின் அளவும் அதிகரித்து மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அளவான சூட்டில் நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது.