வீட்டில் நம்முடைய வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்ட எண்ணங்கள் விலகும், நல்லது நடக்கும், கண் திருஷ்டி, பில்லி சூனியம் கெட்ட செயல்களால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. செயல்களை நாம் செய்யும் போது தெய்வம் விலகி விடுகிறது. சில விஷயங்களை செய்யும்போது தெய்வம் வருகிறது இவ்வாறு பல விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய வீட்டில் சிட்டுக்குருவி, புறா போன்ற பறவைகள், அணில்போன்ற விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த உயிர்களுக்கு தெய்வசக்தி அறியும் ஆற்றல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே புறா போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளும் வீட்டிற்கு வந்தால் அவற்றை விரட்ட வேண்டாம்.
இது நம்ம வீட்டுக்கு வந்து போனால் நல்லது நடக்கும். புதிதாக குடி போகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு செல்லும்போது எதாவது பறவை அல்லது விலங்கு வகை ஒரு உயிரைக் கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களைக் காட்டிலும் பறவைகளிடம் ஜீவசக்தி அதிகமாக இருக்கிறது. உங்கள் வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டித் தொங்கவிட்டால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை சாப்பிட வந்து செல்லும். இந்த சந்தர்ப்பத்தில் அவை அங்கேயே கூடுகட்டி வாழ்ந்து குஞ்சு பொறிக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஜீவன்கள் உங்கள் வீட்டில் வந்து கூடு கட்டினால் அதை கலைக்க கூடாது. இவை தெய்வ சக்தி கொண்டவை என்பதால் இவற்றின் கூட்டை கலைப்பது வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையும்.