Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உங்க வீட்டுல விடுறேன்” பைக்கில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளி கைது….!!

சாலையில் சென்ற பெண்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவருடைய மகனான கூலித் தொழில் செய்து வரும் 30 வயதான லெட்சுமிநாராயணன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றுள்ளார். அந்த பெண்ணை அவருடைய வீட்டில் விடுவதாக கூறி ஏமாற்றி மோட்டர் சைக்கிளில். ஏற்றிய லெட்சுமிநாராயணன் வீட்டுக்கு அழைத்து செல்லாமல் காட்டுப்பகுதிக்கு கடத்தி  சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று அந்தப் பெண்ணை காப்பாற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து லட்சுமி நாராயணனை நேற்று கைது செய்யப்பட்டார். அதன்பின் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட லெட்சுமிநாராயணன் சிறையில்அடைக்கப்பட்டார்.

Categories

Tech |