Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு பூஜை அறையில்….”இந்த டிப்ஸ்களை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க”…. நல்லதே நடக்கும்..!!

மனதிற்கு நிம்மதி தருவது ஆண்டவன் சன்னிதி என்றால் அதே போல் வீட்டில் நிம்மதி தருவது பூஜையறை அப்படிப்பட்ட பூஜையறையை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை இருக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறைக்கு சில குறிப்புகள்:

பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வாடாமல் இருக்கும்.

சாமிக்கு அகல் விளக்கு குத்து விளக்கு ஏற்றும் போது எண்ணெயில் சிறிது கல் உப்பு போட்டால் விளக்கு நன்றாக சுடர்விட்டு பிரகாசமாக எரியும்.

பூஜை அறையில் இருக்கும் அதிக நேரம் எரிய ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் நல்லெண்ணையும் கலந்து ஏற்றுங்கள்.

Categories

Tech |