Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” உங்க வீட்டு முன்னாடி இந்த செடியை வையுங்க”… எந்த நோயும் உங்களை அண்டாது…!!

இந்த செடிகளை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் உங்களுக்கு கொரோனா பாதிப்பு வராது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கொரோனா பிரச்சினை என்றால் முக்கியமான அறிகுறி மூச்சுத்திணறல். உங்கள் உடலில் போதுமான ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இது இருதய நோய்களுக்கு வழிவகுக்கின்றது. இது உங்களுக்கு உயிருக்கே ஆபத்தாக ஏற்படலாம். எனவே உங்கள் வீட்டில் செடி வளர்ப்பது நல்லது.

பிகாஸ் செடி

பிகாஸ் செடி என்று அழைக்கப்படும் இந்த செடி பல்வேறு நன்மைகளை கொண்டது. நாசா இந்த செடியை காற்று சுத்தப்படுத்தியாக அங்கீகரித்துள்ளது. சைலீன், ஃபார்மால்டிஹைட் மற்றும் டோலுயீன் காற்றை திறம்பட சுத்தம் செய்துவிடுகிறது. இந்த செடி உங்களைச் சுற்றியுள்ள காற்றின் தரத்தை மேம்படுத்துவது. உங்கள் வீட்டின் முன் செடியை வைத்தால் நல்லது.

மணிபிளான்ட் செடி

மணிபிளான்ட் செடி பல்வேறு வீடுகளில் எளிதாக காண முடியும். இது காற்றை சுத்திகரித்து மற்ற தாவரங்களைப் போல் இல்லாமல் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதால் உங்கள் வீட்டில் வைத்திருப்பது மிகச்சிறந்தது. கார்பன் மோனாக்சைடு,சைலீன், பென்சீன் போன்ற வான்வழி மாசுபடுத்திகளை திறம்பட அகற்றும்.

அரேகா பனை:

இந்த செடி சுற்றுச் சூழலிலிருந்து ஆபத்தான ரசாயனங்களை அகற்றி தூய்மையான ஆக்சிசனை தருகிறது. அதை மற்ற செடிகளுடன் ஒப்பிடும் போது ஆக்சிஜனை உற்பத்தி செய்வதால் இந்த செடியை உங்கள் வீட்டின் முன் வைத்தால் மிகச் சிறந்த பயன் கிடைக்கும். இந்த தாவரங்களை நல்ல விதமாக பராமரித்து வைக்கவேண்டும்.

Categories

Tech |