இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இதில் துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவை பிரதிபலிக்கும் ஷாலிகிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள். ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர். அதன் நுனிப்பகுதியில் பிரம்மனும், நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர்.
துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதீகம். எந்த இடத்தில் துளசிச் செடி உள்ளதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. துளசியை பூஜை செய்து வந்ததன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக துளசி ராமாயணம் கூறுகிறது.
துளசி இலைகளை எப்பொழுதும் வாயில் போட்டு மெல்லக்கூடாது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். மெல்லுவதற்கு பதிலாக அதனை தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அல்லாய் பொருட்கள் மெல்லும்போது பற்களுடன் நேரடி தொடர்பு கொள்கிறது. இதனால் உங்கள் ஈறுகளில் பிரச்சினை ஏற்படும். சில நாட்களில் துளசி இலைகளையோ அல்லது செடியையோ பறிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சாபமாக மாறிவிடும். குறிப்பாக ஏகாதசி, சூரிய மற்றும் சந்திர கிரகணம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துளசியை பறிக்கக்கூடாது.