Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டு முன்னாடி…. கட்டாயம் இந்த செடியை வையுங்க… வீட்டுக்கும் உங்களுக்கும் ரொம்ப நல்லது…!!

முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை அண்டவிடாமல் செய்யும். தீய சக்தி அறிகுறி தெரிந்தால் கூட இந்த செடி மெல்ல மெல்ல அதனை அகற்றி விடும்.

வீட்டின் முன்பு மருதாணி செடி இருப்பது மிகவும் நல்லது. மருதாணி செடியின் இலையை அரைத்து காலில் வெடிப்பு உள்ள இடங்களில், சேற்றுப்புண், முதுகு கொப்பளம் ஆகியவற்றில் சேர்த்தாள் அனைத்தும் இயற்கை முறையில் குணமாகும். மேலும் இரவில் தூக்கம் வராமல் கவலைப்படுபவர்கள் மருதாணிப் பூவை சிறிதாக எடுத்து தலையணைக்கு அடியில் வைத்தாள் உறக்கம் நன்றாக வரும்.

இதன் வாசம் ஆனது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் ஒரு மங்கலமான நிகழ்ச்சியில் மருதாணி வைப்பது நமது கைகளில் மிகவும் அழகாக இருக்கும். மேலும் லட்சுமி கலாசியத்துடன் இருக்கும். மருதாணி செடி அநேக மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது.

Categories

Tech |