Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்ல இந்தப் பொருளெல்லாம் வச்சிருக்கீங்களா…? உடனே எடுத்துடுங்க… குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.

சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள்.

என்னென்ன பொருள்:

தண்ணீர் பாய்வது போல நீரூற்று புகைப்படங்கள் இருந்தால் அதை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்.

படகு மூழ்குவது அல்லது படகு படங்கள் வீட்டில் இருக்கக்கூடாது. இத்தகைய படங்கள் வீட்டில் உள்ள அதிர்ஷ்டத்தை தடைசெய்யும்.

மகாபாரதப் போர் தொடர்பான படம் வீட்டில் இருந்தால் வீட்டில் உறுப்பினர்களிடம் அடிக்கடி சண்டை ஏற்படும்.

பழைய பூக்கள் ஒரு போதும் வழிபாட்டு அறையில் இருக்கக்கூடாது. அது மஹா லட்சுமி தேவிக்கு பழைய பூவின் மீது கோபம் ஏற்படுமாம். இதனால் செல்வம் வீட்டில் நிலைக்காது. பூஜை அறையில் தினமும் புதிய பூக்களை வைக்க வேண்டும்.

வீட்டின் கதவுகள் உடைந்து இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். வீட்டில் சண்டை போடுவதற்கான வாய்ப்புகள் இதனால் அதிகம் ஏற்படும்.

உடைந்த பொம்மை மற்றும் உடைந்த பொருட்களை ஒருபோதும் வீட்டில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைக்கும் போது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும். உடைந்த பொருள்கள் வீட்டில் பிரச்சனையை உண்டாக்கும்.

Categories

Tech |