உங்கள் வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று கொஞ்சம் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி, கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிகம் நேரம் அப்படியே இருப்பது. வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒட்டடைகள் சேர்ப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் காப்பி கப்புகள் ஆங்காங்கே இருப்பது.
பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பார்கள் தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது. ஆண்கள் புதன் மற்றும் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது. குழாய்களில் தண்ணீர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது. கரையான் சேருவது. பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் உலாவுவது. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது. உணவுப் பொருள்களை வீணடிப்பது. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும்வரை வாங்காமல் இருப்பது. மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
குறைந்தபட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பது ஆக வெளிச்சங்களை குறைப்பது. மெல்லிசை கேட்காமல் சதாகாலம் ராஜச இசையைக் கேட்பது. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்வது. வாசலில் செருப்பு துடைப்பம் போன்ற வற்றால் அலங்கோல படுத்தி வைத்து இருப்பது. இவற்றையெல்லாம் தவிர்த்தால் செல்வ செழிப்புடன் வளமாக வாழலாம்.