Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்ல நீங்க எந்த பாத்திரத்தில் சமைக்கிறீங்க….”எதுல சமைச்சா உடம்புக்கு நல்லது”… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர்.

தற்போது இண்டக்‌ஷன் ஸ்டவ் போன்றவற்றில் சமைக்கின்றனர். இதனால் நாம் விரைவாக சமைக்க முடியும் என்று கூறினாலும் கூட, இதனால் நமக்கு எவ்வளவு கெடுதல் உண்டு என்பது நமக்குத் தெரிய வில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்களில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சமையலறை பாத்திரங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து இதில் பார்ப்போம்.

பித்தளை

கடந்த காலத்தில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களில் ஒன்று பித்தளை. இதனை நாம் சமைத்து சாப்பிடுவதால் ஆரோக்கியம் கிடைக்கும். பித்தளை பாத்திரங்களில் உப்பு ,புளிப்பு  பொருட்களை சமைப்பது, உணவு விஷமாக மாறும்.

அலுமினிய பாத்திரங்கள்:

இன்று ஒவ்வொரு வீட்டிலும் அதிக அளவில் காணப்படும் பாத்திரம் எது என்றால் அலுமினியம். இதில் உள்ள மூலக்கூறுகள் வெப்பத்தை பெற்றவுடன் விரைவில் செயல்படுகிறது. அதனால் பெரும்பாலான உணவுகள் அலுமினிய பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் மிக விரைவில் உணவுடன் ரசாயன எதிர்வினைகளை காட்ட தொடங்குவதால் அதில் புளிப்பு அல்லது அசிடிக் காய்கறிகளை பயன்படுத்துவது கூடாது.

ஸ்டைன்லேஸ் ஸ்டீல்

தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் பாத்திரம். கார்பன் குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியவை இரும்பில் கலப்பதன் மூலம் உருவாகும் உலோகம் தான். இந்த பாத்திரத்தில் சமைப்பதால் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் இல்லை. இந்த பாத்திரத்தில் வெப்பநிலை மிக விரைவாக உயரும்.

இரும்பு பாத்திரம்:

இரும்பு பாத்திரத்தில் நாம் சமையல் செய்யும்போது ஆரோக்கியத்தை தரும். இந்த பாத்திரத்தில் சமைப்பதுதால்  தானாகவே உணவில் உள்ள இரும்பின் அளவு அதிகரிக்கும். இதன் மூலம் ஒரு மனிதன் முழு ஊட்டச்சத்தை பெற முடியும்.

நான் ஸ்டிக்

நான் ஸ்டிக் என்றால் இதில் எந்த பொருளும் ஒட்டாத அளவிற்கு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சமைக்க எண்ணெய் அதிக அளவில் தேவைப்படுவதில்லை. இதில்  உணவை தயாரிக்கும் போது  கீறல் அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

தாமிரம்:

தாமிரம் இரும்பை விட ஐந்து மடங்கு சிறந்தது. ஸ்டைன்லேஸ் ஸ்டீல் பாத்திரங்களை விட 20 மடங்கு சிறந்தது. அதிக வெப்ப கடத்துத் திறன் பண்புகள் கொண்டது. வெப்ப நிலையை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும். இது தீப்பிடிக்கும் அபாயத்தை குறைக்கும். இதன் விளைவாக குறைந்த ஆற்றலுடன் சமைக்க முடியும். தாமிர பாத்திரங்கள் நன்றாக வெப்பமடைவதால் தயாரிக்கப்படும் உணவுகள் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.

செப்பு சமையல் பாத்திரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் தாமிரத்தில் வாழ முடியாது. இந்த நுண்ணுயிர்களுக்கு தாமிரம் நச்சுத்தன்மை வாய்ந்தது.  கிருமி பரவுவதையும் இது தடுக்கும்.

Categories

Tech |