வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாஸ்து சாஸ்திரம் என்பது நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும்.
இவை நம் முன்னோர்கள் முற்றிலும் அனுபவ ரீதியில் நமக்கு தொகுத்து வழங்கியவை. ஒரு மனை எந்த திசையில் அமைந்துள்ளது. அதற்கு எந்த திசையில் வாசல் விடவேண்டும், எந்தெந்த அறைகள் எங்கு இருக்கவேண்டும், அதன் அளவுகள் என அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நம் வீட்டில் பிரோ எங்கு வைக்கலாம் எனப் பார்ப்போம்.
வீட்டில் பணம் இருக்கும் இடம் மகாலட்சுமியாக கருதுவர். அனைவரும் மேலும், மேலும் செல்வம் சேரவேண்டும் என்றே விரும்புவர். அப்படி இருக்கையில் உங்கள் வீட்டில் ஈசானிய மூலை, அதாவது, வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் செல்வம் தங்காது என்பார்கள். அதே சமயம் தென்மேற்கு மூலையில் வைக்கும் போது பணவரவு நன்றாக இருக்கும்.