Categories
பல்சுவை

உங்க ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்துட்டா…. உடனே இத பண்ணுங்க….!!!!!

நமது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுத்து, முதலில் சுவிட்ச் ஆப்  செய்ய வேண்டும். பின்னர் அதனை துணியினால் துடைத்து, முடிந்த அளவிற்கு நன்றாக உதறி, அதிலிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், தண்ணீரில் விழுந்த பின் உங்கள் போன் ஆன் ஆகவே இருந்தால், அது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதே போன்று, ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி கார்டு (SD card), பேட்டரி (Battery), சிம் கார்டு (SIM Card) போன்றவற்றை அதிலிருந்து அகற்ற வேண்டும். .ஸ்மார்ட்போன் முழுமையாக காயாமல், சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் நிச்சயம் கூடாது, அப்படி அவசரப்பட்டு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் ஸ்மார்ட் போன் வெடிக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை அகற்ற அதனை வெயிலில் வைப்பது சிறந்த பலனை தரும் என கூறுகிறார்கள். மேலும், ஸ்மார்ட்போனை வெயிலில் வைத்தால், அதில் இருக்கும் தண்ணீர் சீக்கிரம் உலர்ந்து விடும்.

இரவு நேரமாக இருந்தால் மின்விளக்கு வெளிச்சத்தில் வைப்பதும் பலன் கொடுக்கும். ஸ்மார்ட்போனின் மேல் சிறிது நேரம் அரிசிக்குள் போட்டுவைத்தால் சரியாகும் என சிலர் கூறுகின்றனர். இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய போதும் உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் அதனை சர்வீஸ் சென்ட்டர் எடுத்து சென்று பழுது பார்ப்பது நல்லது.

Categories

Tech |