உங்கள் இமெயிலை சுத்தமாக வைப்பதற்கு சில தகவல்கள்.
உலகில் உள்ள மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இமெயில் என்றால் அது google நிறுவனத்தின் இமெயில் ஆகும். இந்நிலையில் நாம் புதிதாக பல செயலிகளில் கணக்கு திறக்க நமக்கு இந்த இமெயில் உதவும். இதனை பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் தேவையில்லாமல் வரும் மெயில்களை எப்படி தவிர்ப்பது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு சில முக்கியமான தகவல்களை நிறுவனம் கூறியுள்ளது. அதில் முதலில் உங்கள் செல்போனில் உள்ள இமெயில் கணக்கு உள்ளே செல்லவும், பின்னர் search box உள்ளே சென்று unsubscribe என டைப் செய்து என்டர் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் அதில் நீங்கள் திறந்த பல கணக்குகள் வரும். அதனை பார்த்து உங்களுக்கு தேவை இல்லாத மெயில்களை டேப் செய்து டெலீட் செய்து கொள்ளலாம்.
அதன்பின்னர் உங்களுக்கு தேவையில்லாத மெயில்கள் வருவதில்லை. இந்நிலையில் சிலர் அவசர அவசரமாக இமெயில் அனுப்பும் போது சில தவறுகளை செய்து விடுவார்கள். அப்படி செய்து விட்டால் பின்னர் நீங்கள் அனுப்பிய gmail உள்ளே இருக்கும் undo விதியை பயன்படுத்தி இமெயில் எடிட் செய்ய முடியும். இதனை தொடர்ந்து நீங்கள் ஒரு முக்கியமான தகவல்களை அனுப்பினால் அதன் பாதுகாப்புக்காக copying,printing, Forwarding, Downloading போன்றவற்றை தடை செய்ய முடியும். எனவே இந்த டிப்ஸ் பயன்படுத்தி நீங்கள் உங்கள் இமெயில் பாக்ஸை ஆக்கபூர்வமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க முடியும்.