நாடு முழுவதும் கொரோனா காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனாவால் மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவ செலவுகளுக்கு கூட பணமில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற சூழலில் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் பணத்தை எடுத்து செலவு செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அனுமதி அளித்தது. அதன்படி நிறைய வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். இவ்வாறு கொரோனா சிகிச்சைக்கு பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். அதன் பின்னர் UAN நம்பர், பாஸ்வர்டு, கேப்ட்சா குறியீடு ஆகியவற்றைப் பதிவிட்டு உள்நுழைய வேண்டும். பின்னர் ‘Manage’ என்ற வசதியை கிளிக் செய்து ‘Online Services’ என்ற ஆப்சனில் செல்ல வேண்டும். அதில் CLAIM (FORM-31, 19 and 10C) என்பதில் சென்று ‘Proceed for Online Claim’ என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்த பக்கத்தில் (படிவம் 31), வித்டிரா செய்வதற்கான நோக்கம் மற்றும் எடுக்க விரும்பும் தொகை போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். இந்த கட்டத்தில் நீங்கள் முழு, பகுதி அல்லது ஓய்வூதியம் என்ற வகையில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக, படிவம் 31 அல்லது “PF advance’ படிவத்தில் கீழ் தோன்றும் மெனுவில் “I want to apply for” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் ’outbreak of pandemic (Covid-19)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பின்னர் “get Aadhaar OTP” என்பதை கிளிக் செய்து உங்களுடைய செல்போன எண்ணுக்கு வரும் OTP எண்ணைக் கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதையடுத்து உங்களது கோரிக்கை நிறுவனத்தின் ஒப்புதலுக்காக முதலில் அனுப்பப்படும். அதன் பின்னர் தகுதியான தொகை நேரடியாக உங்களது வங்கிக் கணக்கில் இரண்டு வாரங்களுக்குள் டெபாசிட் செய்யப்படும்.