Categories
தேசிய செய்திகள்

உங்க PF கணக்குடன் ஆதார் இணைப்பு…. ரொம்ப ஈஸி தான்…. வாங்க எப்படினு பார்க்கலாம்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது. இதற்கான காலஅவகாசம் ஜூன்-1 வரை கொடுத்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு இணைப்பதற்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். அதுமட்டுமல்லாமல் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே சீக்கிரம் இணைப்பது நல்லது. PF கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி என்று இப்பத்து பார்க்கலாம்.

முதலில் www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் Online Services என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்னர் e-KYC Portal என்ற வசதியில் link UAN aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து UAN நம்பரையும் செல்போன் எண்ணையும் பதிவிட வேண்டும். உடனடியாக உங்களது செல்போனுக்கு ஒரு OTP வரும். அதைப் பதிவிட்டு, பின்னர் ஆதார் எண்ணையும்  பதிவிட வேண்டும். பின்னர் proceed கொடுத்தால் மீண்டும் ஆதாருக்கான ஓடிபி சரிபார்ப்பு முடித்துவிட்டால் ஆதாருடன்உங்கள் PF கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.

Categories

Tech |