Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு”….. கணவர் கைது….!!!!!

உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரின் மகன் உதயகுமார் என்பவர் தேனியை சேர்ந்த 14 வயது சிறுமியை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததை மறுத்து தனது தோட்டத்து வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

பின் வீட்டிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்து விட்டது. இதுப்பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தொடர்பாக உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்.

Categories

Tech |