இஸ்ரேலில் ஆய்வாளர்கள் விடுத்த எச்சரிக்கையடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை செலுத்த அந்நாடு தயாராகி வருகிறது.
இஸ்ரேலுக்கு அந்நாட்டின் ஆய்வாளர்கள் தற்போது அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அதாவது ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் இஸ்ரேல் நாட்டில் பல லட்சம் பேரை ஓமிக்ரான் தொற்று தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்கள். இந்த எச்சரிக்கையை முன்னிட்டு இஸ்ரேல் அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்று எடுத்துள்ளது.
அதாவது பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை செலுத்த முடிவு செய்து அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.