ஆண் குழந்தை பெற்று எடுக்காதற்காக கணவர் தினசரி அடித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் (30) என்பவருக்கு 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் தனது கணவர் ரஞ்சோத்வீர் சிங் சத்துடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இது தம்பதியினருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் மன்தீப் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் 8 ஆண்டுகளாக தனது கணவர் அடித்து துன்புறுத்து வந்து விவரங்களை வேதனையுடன் கூறியுள்ளார்.
மற்றொரு வீடியோவில் மன்தீப் அடிக்கப்படும் காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண் குழந்தை பெற்றெடுக்க கோரி, வேண்டி கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். 50 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படியும் சந்து கூறி கொடுமைப்படுத்தி இருக்கிறார் என மன்தீப் சகோதரி குல்தீப் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் மந்தீப்பின் தந்தை ஐஸ் பால் சிங், பிஜ்னோர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதில் சந்துவின் தந்தை முக்தார் சிங் தாய் குல்தீப் ராஜ்கவூர் மற்றும் சகோதரர் ஐஸ்வீர் சிங்கின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு அமெரிக்க போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வளவு நடந்த பின்பும் சந்துவுடன் ஏன் இரண்டு மகள்களும் இருக்கின்றனர்? எனவும் மந்தீப்பின் இறுதி சடங்கு செய்ய சந்துவிற்கு அனுமதி அளிப்பது ஏன் எனவும் சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர். இதனை தற்கொலை என்பதற்கு பதிலாக படுகொலை எனும் ரீதியில் நியூயார்க் காவல்துறை விசாரித்து வருகிறது என கூறப்படுகின்றது. மேலும் மன்தீப் மரணத்திற்கு நீதி கேட்டு இன்ஸ்டாகிராமில் தி கவுர் இயக்கம் எனும் பெயரில் விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றது.
அதில் ஒருவர் வெளியிட்டிருக்கின்ற வீடியோவில் மன்தீப் கூறும் போது தனது கணவருக்கு திருமணத்திற்கு வெளியே சட்டவிரோத உறவு இருக்கிறது எனவும் குடித்துவிட்டு தினமும் தன்னை அடிப்பது வழக்கம் எனவும் கூறியுள்ளார். கணவரின் துன்புறுத்தலால் வெறுத்து போய்விட்டேன் என அவர் மற்றொரு வீடியோவில் வருத்தத்துடன் பேசிய பின் நியூயார்க் நகரில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிய வந்திருக்கிறது. மேலும் மன்தீப்பின் குடும்பத்தினர் திருமண ஆல்பம் புகைப்படங்களை பார்த்து வேதனையுடன் தங்களது மகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.