Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. உணவில் மயக்க மருந்து…. பெண்ணே பெண்ணுக்கு செய்த துயரம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

அரியானா ஜுண்ட் மாவட்டத்திலுள்ள ஹர்ஹீ கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தன் வீட்டிற்கு அருகில் வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை பார்ப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சென்றுள்ளார். அப்போது அப்பெண் தன் வீட்டில் வைத்து மயக்க மருந்து கலந்த உணவை சிறுமிக்கு கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சிறுமி சிறுதி நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அப்பெண் தனது கூட்டாளிகளான இரு ஆண் நண்பர்களை அழைத்துள்ளார். அந்த ஆண் நபர்கள் இருவரும் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை அப்பெண் வீடியோவாக எடுத்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியிடம் இது தொடர்பாக யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும், மீறி கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண்ணும், அவரின் ஆண் கூட்டாளிகளும் சிறுமியிடம் இருந்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆகவே  மிரட்டலுக்கு பயந்துப்போன அந்த சிறுமி தொடர்ந்து பணத்தை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில அந்த கும்பல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாலும், மிரட்டல் விடுத்ததாலும் சிறுமி தனக்கு நடந்த துயரத்தை 5 மாதங்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆண் நபர்கள் இருவரையும், அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அந்த பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |