சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள வாடி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியை அவரது தாய் அருகில் உள்ள கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது சிறுமி கதறி துடித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சத்தத்தை கேட்ட பகுதி மக்கள் விரைந்து வந்தனர். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.