Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….!! பிரபல நாட்டில் “சிறையில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை”…. வெளியான பகிர் தகவல்….!!!!

பிரபல நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் ஒரு இளம் பெண்ணை சரமரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு  பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஓடுக்கியது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய  தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பெண்கள், சிறுவர்கள் என 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் பலருக்கு தூக்கு தண்டனையும் அந்நாட்டு  நீதிமன்றம் வழங்கி வருகிறது. ஈரான் அரசின் இந்த கொடூர செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து நர்கீஸ் முகமது என்ற பெண் சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களை போலீஸ்காரர்கள் கற்பழிப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு மறுத்துள்ளது.

Categories

Tech |