மகளை அடித்து கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரடாப்பட்டு கிராமத்தில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசன்ன தேவ் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பூபாலனுக்கும் அவரது மனைவி சுகன்யாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுகன்யா தனது மகள் ரித்திகாவை தாக்கி வந்துள்ளார். அதேபோல் நேற்றும் பூபாலனுக்கும் சுகன்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா ரித்திகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரித்திகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூபாலன் தனது குழந்தையை அடித்து கொலை செய்த சுகன்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுகன்யாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.