Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்…!!!

ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக போலி சாமியார்கள் ஏமாற்றி பணம் பறிப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஆந்திர மாநிலம் மதன பள்ளியை சேர்ந்த பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்லூரி முதல்வராகவும் பேராசிரியராகவும் பணியாற்றும் பெற்றோர் அற்புதங்கள் நிகழும் என்று நம்பி மகள்களை நரபலி கொடுத்துள்ளனர்.

ஒரு இரவில் மீண்டும் உயிருடன் திரும்புவார்கள் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Categories

Tech |