Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆத்திரத்தில் 6 வயது மகனை கொன்ற தந்தை…. அதிர்ச்சி….!!!!

மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆறு வயது மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் மலாட் பகுதியில் நேற்று இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா உடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு தனது ஆறு வயது மகனை கொலை செய்தார். நேற்று காலை சுனிதா தனது 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்று வீடு திரும்பிய போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனது மகன் பிணமாக கிடந்துள்ளார். கூர்மையான பொருளால் அவரது கழுத்தில் அறுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுனிதா உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நந்தனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |