உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள துல்லாபூர்வா என்ற கிராமத்தில் நியூ ஜீவன் என்று மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை பாஜக ஆளும் மாநிலத்தில் பங்காரம்மா தொகுதி எம்எல்ஏ ஸ்ரீகாந்த் கட்டியார் என்பவரால் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் நஜியா என்ற இளம்பெண் செவிலியராக பணியில் கடந்த வெள்ளிக்கிழமை சேர்ந்துள்ளார். அன்று இரவு பணி நிமித்தமாக அந்த செவிலியர் மருத்துவமனையிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள் காலை அந்த செவிலியர் மருத்துவமனையில் பின்புறமாக இரும்பு தடி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவருடைய கழுத்துப் பகுதியில் கயிறு அறுபட்டு இருந்துள்ளது.கை குட்டை போன்ற ஒரு துணி அவருடைய கையில் இருந்துள்ளது. அவருக்கும் அவருடைய நெஞ்சுக்கும் இடையே கைகள் பதிக்கப்பட்ட நிலையில் இருந்தன. இதைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் வந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்..
இந்நிலையில் நஜியாவின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் பணியாற்றிய 4 பேர் மீது கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உன்னாவ் மாவட்டத்தில் சமீபகாலமாகவே அடுத்தடுத்து கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.