Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….!! வாலிபர்களிடமிருந்து தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவி…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள முகர்ஜி நாகர் பகுதியில் கல்லூரி மாணவி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமான நிலையில் அந்த வாலிபர் மாணவியை  தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய  அந்த மாணவி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். மேலும் அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைத்த மாணவி 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |