Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. 13 வயது சிறுமியை சீரழித்த 74 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களின் 13 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயாரும் சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக பழகி வந்தன குமாரி என்ற பெண் பணியாளர் ஒருவர் அந்த சிறுமியை தத்து எடுத்துக் கொள்வதாக கூறினார். இதனை நம்பிய சிறுமியின் தந்தை தனது மகளை அவரிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து அந்த சிறுமியை அழைத்துச் சென்ற மருத்துவமனை ஊழியர் சொர்ணகுமாரி,அங்குள்ள விஜயவாடா மற்றும் காக்கிநாடா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். அந்த சிறுமியால் எதுவுமே செய்ய முடியவில்லை. நாள் போக்கில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இந்நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த சிறுமி குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை உடனே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சொர்ணகுமாரி உட்பட மருத்துவமனை ஊழியர்கள் 21 பேரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்ந்த 61 பேரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |