ராஜஸ்தான் மாநிலம் அஸ்மீர் மாவட்டம் மக்ளியவாஸ் பகுதி ஜிகல்புரா கொலா கிராமத்தை சேர்ந்த விவசாயி பொத்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மதீனா (32) இந்த தம்பதியினருக்கு கோமல் (4), ரிங்கு(3), ராஜ்வீர் (2), தேவராஜ் (பிறந்து 1 மாதம்) நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மதீனாவிற்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இடையே பிரச்சனை நிலவி வந்திருக்கின்றது. இதனால் மதினாவிற்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மதினா தனது நான்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு உள்ள பாலடைந்த கிணத்துக்குள் தனது 4 குழந்தைகளையும் வீசிய மதினா தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். குழந்தைகளும் மதினாவும் வீட்டில் இல்லாததை அறிந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கிராமம் முழுவதும் தேடி இருக்கின்றனர். இந்தநிலையில் கிராமத்திற்கு வெளியே இருந்த கிணற்றுக்குள் பார்த்தபோது மதினாக்கு கிணற்றுக்குள் கிடந்ததை கண்ட அதிர்ச்சடைந்துள்ளனர். அதன்பின் ஐந்து பேரையும் ஊர் மக்கள் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். ஆனால் கிணற்றில் தண்ணீருக்குள் மூழ்கிய நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் குழந்தைகளின் மதினா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.