ரஷ்யா – உக்ரைன் இடையே 55வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதலை மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நகரின் மேயர் ஆண்ட்ரி சாடோவி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “திடீரென லிவிவ் மீது 4 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் வானை கரும்புகை சூழ்ந்தது. அதில் ஒரு ஏவுகணை டயர் கடை மீதும், மற்ற 3 ஏவுகணைகள் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் விழுந்து வெடித்துள்ளது. இந்த தாக்குதலால் எழுந்துள்ள தீயை அவசரகால மீட்புப்படையினர் போராடி அணைத்து வருகின்றனர்.