டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடக்கும் போது நான்கு முக்கியமான விவசாய தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 58 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அப்போது ட்ராக்டர் பேரணி நடக்கும் சமயத்தில் 4 முக்கியமான விவசாய தலைவர்களை சுட்டுக் கொல்லவும், டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் திட்டமிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.