இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியது. பா.ஜ.க-வினர் மற்றும் இந்துமத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அப்பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகாபடுகோனும் பச்சை நிறத்தில் பாகிஸ்தானை குறிக்கும் விதத்தில் ஷாருக்கான் உடை அணிந்து ஆடுவதற்கும் எதிராக சர்ச்சைகள் வெடித்தது. இதனிடையில் பதான் திரைப்படம் ஒடிடி உரிமையில் பெரும் தொகையைப் பெற்றுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்னதாகவே அதன் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை பெற்று விட்டது. இத்தொகையானது கேஜிஎப் 2 போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும்.
இது இந்த வருடத்தின் அதிகபட்ச வசூலாகும். ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் பதான் திரைப்படத்தை மார்ச் இறுதியில் (அ) ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒடிடி தளத்தில் பார்வையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம். எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.