கைகள் மற்றும் தலை இல்லாமல் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னபாளையம் பகுதியில் அமைந்துள்ள சாலை ஓரங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று சாலை ஓரத்தில் 30 வயதுடைய வாலிபர் ஒருவரின் சடலம் தலை மற்றும் கைகள் இல்லாமல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலை மற்றும் 2 கைகள் துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.