Categories
Uncategorized தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. 2 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை…. டெல்லியில் பயங்கரம்…..!!!!!

டெல்லி மாநகராட்சி பள்ளியின் வகுப்பறையில் 2 மாணவிகளை ஒரு நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் வகுப்பறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அங்கு இருந்த 2 பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டி இருக்கிறார். மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன்பு சிறுநீர் கழித்து இருக்கிறார். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அரேங்கேறியுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவிகள் பள்ளி முதல்வரிடமும், ஆசிரியரிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இச்சம்பவம் வெளியில் தெரிந்தால் தங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடும் என்று ஆசிரியர் மற்றும் முதல்வர் அமைதியாக இருந்துள்ளனர்.

மேலும் பள்ளி மாணவிகளிடமும் இச்சம்பவத்தை மறந்துவிடும்படி தெரிவித்துள்ளனர். இப்போது இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் பெண்கள் ஆணையம் டெல்லி போலீஸ் மற்றும் கிழக்கு முனிசிபில் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீதும், அதை மறைத்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் ஜெயின் கூறியிருப்பதாவது “இச்சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இது மாநகராட்சி பள்ளி என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதன் காரணமாக குற்றவாளி தொடர்பான தகவல் தெரியவில்லை. எனினும் இதற்காக தனிப்படை அமைத்து அக்கம் பக்கத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம். அதேபோன்று மாணவிகளிடம் குற்றவாளி பற்றிய தகவல்களை பெற்று அவர்கள் தந்த அடையாளத்தின் அடிப்படையில் தேடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |