Categories
உலக செய்திகள்

உச்சக்கட்ட போர் பதற்றம்…. உக்ரைனில் தவிக்கும் 7.5 மில்லியன் குழந்தைகள்…. பெரும் பரபரப்பு…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள 7.5 மில்லியன் குழந்தைகளின் உயிர் மற்றும் நல்வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் வருத்தம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்காக கடந்த 8 ஆண்டுகளாக யுனிசெப் பணியாற்றி வரும் கிழக்கு உக்ரைனில், போர் காரணமாக உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான குடிநீர் கூட இல்லாமல் தவித்து வருவதாகவும் அதன் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Categories

Tech |