கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது. தற்போதைய நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்கி, அதனை நடத்தினால் கொரோனா மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவதால் எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதுவரை தேர்தல் நடத்தக்கூடாது, தள்ளி வைக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை நாளை மறுதினம் (21ஆம் தேதி) விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.