சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகின்றது. மேலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கொரோனா தொற்று உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக் கொள்ளப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, “உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமிக்ரான் வைரஸ் ஆபத்தானது அல்ல” என தெரிவிக்கின்றனர். மேலும் சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் நிறுத்திவிட்டனர். இந்நிலையில் சீனாவில் தற்போது அதிகாரிகள் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடு வீடாக செல்கின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துகின்றனர். ஆனால் தடுப்பூசியா வேண்டாம் என்று முதியவர்கள் ஓடுகிற நிலை இருக்கிறது.
இது குறித்து 64 வயதான லி லியான்ஷெங் என்பவர் கூறிய போது, “தடுப்பூசியினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் குறித்து கேள்விப்படுகிற முதியோர் தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால் என்னுடைய நண்பர் ஒருவருக்கு 55 வயதாகிறது. அவர் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வந்தது. மேலும் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டது. இதனால் எனது நண்பர் இன்னொரு தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பவில்லை. மேலும் வைரஸ் தொற்று உருமாறிக் கொண்டிருக்கும்போது நாம் போட்டுக் கொள்கின்ற தடுப்பூசிகள் எந்த அளவு பலனளிக்கும் என்பதையும் நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.