Categories
மாநில செய்திகள்

உச்சத்தில் கொரோனா…. தினசரி பாதிப்பு 23,888 பேர்…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23,443 -இல் இருந்து 23,888 ஆக உயர்ந்துள்ளது. 1,41,562 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 23,888 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 8,305 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,038 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் 1,61,171 பேர் உள்ளனர்.

Categories

Tech |