கோடை கால வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் வெப்பத்தை முன்கூட்டியே கணித்து அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும் என தெரிவித்தனர். இந்நிலையில் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா. மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படும் என்பதால் வெயில் பாதிப்புகளும் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கும் கோடை வெப்பம் மே மாதத்தில் அதன் உச்சத்தை அடைத்து ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் குறையும் என தெரிவித்தனர்.