கேரட் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் வரும் புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது உண்டு. ஆனால் தற்போது மற்ற காய்கறிகளை விட கேரட்டின் விலை உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரட்டின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் கேரட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 100 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். இந்த விலை உயர்வு இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் விலையை பார்த்து மக்கள் கேரட்டுகளை வாங்காமலேயே செல்கின்றனர்.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 400 முதல் 500 முட்டைகள் மட்டுமே வருகிறது. மேலும் தற்போது, முருங்கைக்காய், அவரக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறி விலை குறைந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது. தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்கும். மேலும் இனி வரக்கூடிய காலம் மழைக்காலமாக இருக்கும் என்பதால் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.