உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வந்தது. இதனால் பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வட கொரியா நாட்டில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அங்கு நாட்டிற்குள் கொரோனா வைரஸ் புகுந்து உள்ளது என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து பொது முடக்கத்தை அமல்படுத்தினார்.
அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் மட்டுமே மேலும் 2.63 லட்சம் பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்று ஒரே நாளில் 2 பேர் தொற்றுக்கு பலியாகினர். இதுவரை இந்தத் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.