Categories
அரசியல் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது…! உருகிய பாஜக அண்ணாமலை…!!!

கல்வி & வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். 103வது அரசியல் சாசனத் திருத்தம் மூலம் 2019ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியை சார்ந்தவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதை வரவேற்று பேசிய அண்ணாமலை, உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது. எங்கேயும் யாரும் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால், அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பலருக்கும் இது உதவும் என  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |