சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தது இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் , பாலகிருஷ்ணன், சிறப்பு ஆய்வாளர் பால் துறை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்கள் என்று தமிழக முதல்வர் கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் தமிழக முதல்வரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் ராஜராஜன் முதல்வரை விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழக ஆளும் தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.