மருத்துவ படிப்பில் OBCக்கு இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 27ம் தேதி வழங்கப்படம் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் எஸ்சி ? எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க படுகின்றது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் தான் OBC பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.